பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா சமீபத்தில் மூளை அருகே அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொள்ள இருப்பதாகவும் தான் நலமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாகவும் இதனை அடுத்து அவர் நலமடைந்து வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. மேலும் அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து அவரது மகள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அர்ச்சனா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் முற்றிலும் குணமாகி விட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தன்னை அனைவரும் நன்றாக குழந்தைபோல் பார்த்துக்கொண்டார்கள் என்றும் அவர்களுடைய உதவியால்தான் தான் மீண்டும் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் அவர் வீல்சேரில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து வீட்டுக்கு செல்லும் வீடியோ காட்சிகளும் அதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.