இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை….!

விஜய் டிவி மற்றும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன். இவர் சீரியல் மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிரம் பக்கம் மூலமும் தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தார்.

sivani

அதன் பலனாக இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் இன்னும் பிரபலமானார். அதன் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷிவானிக்கு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் தான் நடிக்க இருப்பதாக ஷிவானி அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தற்போது சன் பிக்ச்சர் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக VJS46 என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகை ஷிவானி இந்த படத்தில் இணைந்துள்ளாராம். அதுவும் போலீஸ் அதிகாரியாக ஷிவானி இந்த படத்தில் நடித்து வருகிறாராம். இதுகுறித்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “பொன் ராம் மாதிரியான ஜாலியான இயக்குனருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி” என ஷிவானி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஷிவானி நடித்துள்ள விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் இரண்டாவது முறையாக ஷிவானி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment