அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் 5? போட்டியாளர்கள் யார் யார்?

daed0a7d669caa39875684ab6566f3cb

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, தர்ஷா, சுனிதா மற்றும் தர்ஷா உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி புரமோ படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்றும் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 5.55 மணிக்கு விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.