வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை பவினாபென்: பிரதமர் மோடி பாராட்டு

f175b190666b914f05abe1467f8e9cb3

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பவினாபென் பட்டேல் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே நேற்று பார்த்தோம் 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் சீனாவின் சூயிங் என்ற வீராங்கனையை பவினாபென் பட்டேல் எதிர்த்து மோதினார். இந்த போட்டியில் சூயிங் பவினாபென் பட்டேல் அவர்களை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது 

தோல்வி அடைந்த பவினாபென் பட்டேல் அவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதனை அடுத்து இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த முதல் வெள்ளி பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் பட்டேல் அவர்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளார். நீங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளீர்கள் என்றும் உங்கள் பெயரை வரலாற்றில் எழுதி உள்ளீர்கள் என்றும் உங்கள் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment