Connect with us

ஒரு வழியா அமீரிடம் காதலை சொன்ன பாவனி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

pavani amir 1638770457 1639628731 1640144007 1653561321

பொழுதுபோக்கு

ஒரு வழியா அமீரிடம் காதலை சொன்ன பாவனி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இருந்தாலும் அதே டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் மூலம் பாவனி சின்னத் திரையில் மூலம் தான் அறிமுகமானார்.

அதே பிக் பாஸ் சீசன் 5 போட்டியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் சென்ற அமீர் பாவனி இடம் நெருக்கமாக முதலில் இருந்தே பழகி வந்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அமீர் பாவனி காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கூறிவந்தார்கள். ஆனால் பாவனியின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது பாவனியை கண்டித்ததுடன் மட்டுமல்லாமல் அமீரை திட்டவும் செய்தார்கள்.

amir propose to pavani for a play biggboss5 tamil photos pictures stills

பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பின்பும் அமீரும் பாவனியும் வெளியிடங்களில் ஒன்றாகவே சுற்றி வந்தனர். பாவனியிடம் அமீரை காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இதுவரை இருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி நடனமாடி பார்ப்பவர்களை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சிறப்பு விருந்தனர்களே பாராட்டினார்கள். பிக் பாஸ் சீசன் 5 அமீரை திட்டிய பாவனி குடும்பத்தினர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீருக்கு நன்றி தெரிவித்ததுடன் என்னுடைய சகோதரியை நீங்கள் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள் என கூறி வாட்ச் ஒன்றை அமீருக்கு பரிசாக கொடுத்தார்கள்.

பாவனி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்ததால் மறுமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். தற்பொழுது அவருடைய வாழ்க்கையில் அமீர் வந்த பிறகு முகத்தில் சந்தோசத்தை பார்க்க முடிகிறது என்று கூறி வருகிறார்கள் பாவனிக்கு நெருக்கமானவர்கள். ரசிகர்களோ அமீரை பாவனி வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் என்றும் அமீர் பாவனியை சிரிக்க வைக்கிறார் சந்தோசப்படுத்துகிறார் என்றும் கூறி வந்தார்கள். பாவனி ரெட்டி தான் அந்த கடிகாரத்தை அமீரின் கையில் கட்டிவிட்டார், ஆனால் அப்போதும் கூட தனது காதலை தெரிவிக்கவில்லை பாவனி.
untitled design 5 35 16472555064x3 1

இன்று அமீரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ லவ் யூ டா அமீர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாவனி ரெட்டி போட்ட பதிவில் “பிறர் வாழ்வில் மகிழ்ச்சியைப் பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உங்களைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாக்கியம், நான் உங்களிடமிருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

குக் வித் கோமாளி 3-ல் ஸ்பெஷல் பைனலிஸ்ட் ஆக இணையப்போவது யார்?

உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் நல்லது கெட்டது நேசித்ததற்கு நன்றி, தங்க இதயம் கொண்ட ஒரு மனிதன் நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன் ஐ லவ் யூ டா பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CgBptJcrqut/

இந்த பதிவின் மூலம் அமீருடனான காதலை பாவனி உறுதி செய்துள்ளார் என்று ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top