இனிமேல் தனியாகத்தான் என் வாழ்க்கையோ? கண்ணீருடன் பவானி ரெட்டி!
பிரபல தொலைக்காட்சி நடிகை பவானி ரெட்டி இனிமேல் தான் வாழ்க்கை முழுவதும் தனியாகவே கழிந்து விடுமோ என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியது சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பவானி ரெட்டி என்று தனது கணவர் இறப்பு குறித்து கூறியபோது ’எனது கணவர் இறந்தபோது எனக்கு அழுகையே வரவில்லை, என்னை அவர் இடையில் விட்டு விட்டு சென்று விட்டார் என்ற கோபம்தான் வந்தது.
நானும் என் கணவரும் அவ்வளவு கனவு காண்போம், அவ்வளவு கஷ்டப்பட்டோம், அப்படி இருக்கும்போது என்னை அவர் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கோபம் தான் அவர் மீது எனக்கு ஏற்பட்டது என்று கூறினார். என்னை அவர் ஒரு குழந்தை போல பார்த்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இனிமேல் எனது வாழ்க்கை தனியாகவே இருக்க வேண்டும் என்பதுதான் விதியோ என்றும் அவர் கேள்வி எழுப்பியது சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day5 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/aPXHqA5lcx
— Vijay Television (@vijaytelevision) October 8, 2021
