விடுதலை வேங்கையான பாரதியின் நினைவு நாள்-அமைச்சர், மேயர் உள்ளிட்டோர் மரியாதை!!

சுதந்திர இந்தியாவில் நாம் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சுதந்திரத்திற்கு பலரின் தியாகிகள் தான் முழுக்க முழுக்க காரணமாக உள்ளது. அதிலும் ஒரு சில தியாகிகள் பற்றி பலருக்கும் தெரியாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தமிழ் மக்களிடையே விடுதலை எழுச்சி உணர்வை ஊட்டியவர்களின் எண்ணிக்கை ஏராளமாக காணப்படுகிறது. அவர்களில் தலை சிறந்தவராக திகழ்ந்து கொண்டு வருகிறார் பாரதியார்.

இவர் தனது கவிதையின் திறனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த நம் இந்திய மக்களிடம் விடுதலை உணர்ச்சியை ஊட்டி பாடுபட்டார். அதிலும் குறிப்பாக இவரின் பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு உள்ளிட்ட காவியங்கள் இன்று வரையும் பாட புத்தகங்களில் இடம் பெற்று காணப்படுகிறது.

இத்தகைய விடுதலை வேங்கையான பாரதியார் அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் எட்டையாபுரத்தில் பிறந்தார். இந்த நிலையில் இவர் 11-9-1921 ஆம் ஆண்டு காலமானார். அவரின் நினைவு நாளான இன்றைய தினத்தை பலரும் மரியாதை செலுத்தி கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை காமராஜர் சாலை அருகே அவரின் உருவப்படம் வைத்து மலர் தூவி அமைச்சர் மற்றும் சென்னை மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வந்தனர். மேலும் பாரதியின் தேச பக்தி பாடல்களை பள்ளி மாணவர்கள் பாடி அவர்களின் நினைவு நாளை நினைவு கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment