அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை கண்டித்து வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று வேலூர் மாவட்ட பாஜக சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
பாஜக போராட்டத்தையொட்டி மாநகராட்சி அலுவலக கேட் மூடப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர்.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கோஷங்களை எழுப்பினர்.
இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.ர் இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.