மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

மகாகவி பாரதியாரின் பேத்தி லலித பாரதி வயது முதிர்வு காரணமாக காலமானதை அடுத்து பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் என்பவரின் மகள் லலித பாரதி. 94 வயதான இவர் இன்று காலை 9 மணிக்கு காலமானார். இதனை அடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இசை ஆசிரியராக பணியாற்றினார் என்பதும் பல இசை மேதைகளை அவர் உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவமாக அவர் முக்கிய பங்காற்றினார். லலித பாரதியின் மகன் ராஜ்குமார் பாரதி கர்நாடக இசை பாடகர் என்பதும் இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாகவி பாரதியாரின் பேத்தி காலமானதை அடுத்து அரசியல் பிரபலங்கள் திரை உலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.