விஜயசாந்தி அறிமுகம்.. பாரதிராஜாவின் நடிப்பு.. கல்லுக்குள் ஈரம் படத்தின் ஆச்சரிய தகவல்..!

90களில் ஆக்சன் ஹீரோயினியாக நடித்த விஜயசாந்தியை அறிமுகம் செய்தது பாரதிராஜா தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். அவரது இயக்கத்தில் உருவான கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் தான் விஜயசாந்தி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் தான் முதல் முதலாக பாரதிராஜாவும் நடித்தார். விஜயசாந்தி மட்டுமின்றி இந்த படத்தில் அருணா என்ற நடிகையும் அறிமுகமானார்.

பாரதிராஜா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கல்லுக்குள் ஈரம். கட்ந்த1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வெளியான இந்த படத்தில் சுதாகர் இன்னொரு ஹீரோவாக நடித்திருப்பார். பாரதிராஜா, சுதாகர், அருணா, விஜயசாந்தி, வெண்ணிறை ஆடை நிர்மலா, கவுண்டமணி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருப்பார்கள்.

இந்த படத்தில் பாரதிராஜாவின் உதவியாளர்களாக பணிபுரிந்த மணிவண்ணன் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் நடித்து இருப்பார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக சிறு பொன்மணி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

டீச்சர் என்றாலே இவங்க தான்… கடலோர கவிதைகள் ரேகா… பாரதிராஜாவால் ஜொலித்த நடிகை….!!

இந்த படத்தில் பாரதிராஜா ஒரு இயக்குனர் கேரக்டரிலேயே நடித்திருப்பார். ஒரு கிராமத்திற்கு அவர் படப்பிடிப்புக்காக செல்லும்போது அங்கு நடக்கும் சில சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. பாரதிராஜா இயக்கும் படத்தின் ஹீரோவாக சுதாகர் நடித்திருப்பார். அவர் படப்பிடிப்பிற்காக கிராமத்திற்கு செல்லும் போது கிராமத்து பெண் ஒருவர் மீது காதல் கொள்வதும் அந்த காதலை அவர் ஏற்றுக்கொண்டாரா என்பதும் தான் இந்த படத்தின் கதை.

images 62

நடிகை சுஜாதாவை சுற்றியிருந்த மாயவேலி.. கடைசி வரை திரையுலகினர்களுக்கு புரியாத மர்மம்..!

அதேபோல் பாரதிராஜாவையும் அதே கிராமத்தில் உள்ள பெண் ஒருவர் காதலிப்பார். முழுக்க முழுக்க இந்த இரண்டு காதல் அம்சம் கொண்ட இந்த படம் சுவாரசியமாகவும் காமெடியாகவும் நகரும். இந்த படத்தில் அறிமுகமான விஜயசாந்தி, அருணா ஆகிய இருவருமே பின்னாலில் அதிக அளவில் பட வாய்ப்புகள் பெற்று பிரபலமானார்கள்.

இந்த படத்தில் அறிமுகமான விஜயசாந்தி மற்றும் அருணா ஆகிய இருவருமே புதுமுக நடிகைகள் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக சுதாகரை உருகி உருகி காதலிக்கும் விஜயசாந்தியின் நடிப்பு அசத்தலாக இருக்கும் அதே போல் பாரதிராஜாவை ஒருதலையாக காதலிக்கும் அருணாவின் நடிப்பும் சூப்பராக இருக்கும்.

இந்த படத்தில் கவுண்டமணி குடிகார வேடத்தில் நடித்து காமெடியில் கலக்கி இருப்பார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தது மட்டுமின்றி படத்தில் உதவி இயக்குனராக நடித்திருப்பார்கள்.

குரூப் டான்ஸ் முதல் வில்லி வரை…. நடிகை சிஐடி சகுந்தலாவின் திரை பயணம்…!!

இந்த படத்தில் இடம்பெறும் கிராமத்து காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். கிராமத்திற்கு கேமராவை கொண்டு சென்று முதல் முறையாக படமாக்கியது பாரதிராஜா தான் என்ற நிலையில் மீண்டும் அவர் கிராமத்து கதையில் அசத்தி இருப்பார். இந்த படம் 16 வயதினிலே, கிழக்கு போகும் ரயில் போன்ற படங்களை போல் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ஆவரேஜ் படமாக அமைந்து இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews