பரத் நடிக்கும் மலையாளப்படம்

பாய்ஸ் படத்தில் ஒல்லிப்பிச்சான் உடம்புடன் அறிமுகமானவர் பரத். ஐந்தாறு கதாநாயகர்களில் ஒருவராக வந்து போன இந்த படத்துக்கு பின்பு 2004ல் வந்த காதல் திரைப்படம் பரத்தை உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்தது.

22d2aa025c93ffc757e315065b9d08eb

இந்த படத்துக்கு பின் பரத் முன்னணி ஹீரோவானார். தொடர்ந்து அதற்கடுத்தாற்போல் வந்த போர் ஸ்டூடண்ட்ஸ் படமும் பரத்தை மிகப்பெரிய ஹீரோவாக்கியது. அவரின் டான்ஸ் திறமையை வெளியுலகுக்கு உணர்த்தியது. அன்னக்கிளி நீ வாடி, லஜ்ஜாவதியே போன்ற பாடல்கள் பரத்தை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்தது.

கூடல் நகர், 555 போன்ற படங்களில் அதிக ரிஸ்க் எடுத்தும் நடித்திருந்தார் பரத். சமீப நாட்களாக பரத்தை முன்பு போல் படங்களில் பார்க்க முடிவதில்லை. நடித்த ஒன்றிரண்டு படங்களும் பல்வேறு காரணங்களால் வர தாமதமாகிறது.

இந்நிலையில் பரத் மலையாளப்படமொன்றில் நடிக்க இருப்பதாக டுவிட்டரில் அப்டேட் செய்துள்ளார். மற்ற தகவல்கள் பின்பு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment