பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிர் இழந்த பரதக் கலைஞர்!

மதுரையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே பரதக் கலைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அருகே உள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவின் பூச்சொரிதல் நாளில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது.

நடன நிகழ்ச்சியில் பரதம், கரகாட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் பரதக் கலைஞர் காளிதாஸ் அவரது மகள் மற்றும் அவரது மாணவிகளுடன் நடனத்தில் பங்கேற்றுள்ளார்.

சிறிது நேரம் மாணவிகளுடன் நடனமாடிய காளிதாஸ், மேடையை விட்டு இறங்கி அருகில் இருந்த சேரில் நெஞ்சைப் பிடித்தவாறு அமர்ந்துள்ளார்.  மறுபுறம் காளிதாஸின் மகளும் இதர மாணவிகளும் தொடர்ந்து நடனம் ஆடி முடித்துள்ளனர்.

நடனம் ஆடி முடித்துவிட்டு கீழே வந்து பார்க்கையில் காளிதாஸ் உயிர் இழந்ததைத் தெரிந்து அவரது மகள் கதறி அழுதுள்ளார். மேலும் பரத மாணவிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் சிந்தியது காண்போர் நெஞ்சையும் கலங்கச் செய்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment