மூக்கு வழி கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு? அரசு அறிவிப்பு!

மூக்கு வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்துவதற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இது குறித்த விலை நிர்ணயம் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் தற்போது மூக்கு வழியாக கொரோனா மருந்து செலுத்தப் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மூக்கு வழியாக தடுப்பூசி விலை நிர்ணயத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இதன் விலை ரூபாய் 800 என்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 325 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திலிருந்து இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ஏற்கனவே இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களும் இதனை செலுத்தி கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.