பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா, கமல் – ரஜினி படங்களிலும் நடித்துள்ளாரா?

இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா கமல், ரஜினி படங்கள் உள்பட சுமார் 25க்கும் மேற்கொண்ட படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவலாகும்.

இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பிரவீனா. 1981ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

திருமணத்திற்கு முன்பே இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தார். பாக்யராஜுடன் ‘பாமா ருக்மணி’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

praveena 3

இரு மனைவிகளுடன் மாட்டிக் கொண்டு முழிக்கும் கேரக்டரில் பாக்யராஜ் நடித்திருந்தார். ஒரு மனைவியாக ராதிகாவும் இன்னொரு மனைவியாக பிரவீனாவும் நடித்திருந்தனர்.

இந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பிரவீனா ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார். ‘பாமா ருக்மணி’ தான் அவர் நடித்த கடைசி தமிழ் படமாகும்.

பாக்யராஜ் முதல் மனைவிக்கு ஏவிஎம் சரவணன் கொடுத்த வாக்குறுதி.. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்குள் மறைந்த சோகம்..!

1981ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டே வருடங்களில் அதாவது 1983ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் திடீரென பிரவீனா காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கும் பாக்யராஜூக்கும் பெரும் இழப்பாகும். தனது முந்தானை முடிச்சு படத்தில் கூட தனது முதல் மனைவியாக பிரவீனாவின் போட்டோவைத்தான் பாக்யராஜ் வைத்திருப்பார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

praveena 2

இந்த நிலையில் கமல், ரஜினி படங்கள் உள்பட சுமார் 25 படங்களில் பிரவீனா நடித்துள்ளார் என்பது ஆச்சரியமான தகவலாகும். பிரவீனா நடித்த முதல் படமே கமலஹாசன் படமாகும். அந்தப் படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘மன்மத லீலை’ என்பது தான் ஆச்சரியமான தகவலாகும்.

இந்த படத்தை அடுத்து அவர் தமிழில் ‘டாக்ஸி டிரைவர்’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘அடுக்கு மல்லி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படத்தில் ரூபா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் மூலம் அவருக்கு ரசிகர்கள் குவிந்தார்கள்.

praveena 1

இதனையடுத்து விஜயகாந்த் நடித்த ‘நீரோட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 28 படங்களில் பிரவீனா நடித்துள்ளார்.

பிரவீனாவின் மறைவுக்கு பின்னர் திருமணமே வேண்டாம் என்று பாக்யராஜ் இருந்த நிலையில்தான் பூர்ணிமா ஜெயராமை சந்தித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக பூர்ணிமாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.

poornima jayaram1

கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!

மிகச்சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்த பிரவீனாவின் மறைவு ரசிகர்களுக்கு பெரும் இழப்பாக இருந்தாலும் அவரது படங்கள் தமிழ் சினிமா உள்ளவரை பேசிக்கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...