மலையாள மொழியில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நஸ்ரியா. இவர் தமிழ் சினிமாவில் நையாண்டி,ராஜா ராணி,திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் வரிசையாகச் வெற்றி பெற்று வந்த நிலையில் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவருடைய கணவர் பகத் பாசில் நடித்த புஷ்பா, விக்ரம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தது.
அதே போல் பகத் பாசில் மற்றும் அவருடைய மனைவி நஸ்ரியா இணைந்து நடித்த மலையாள திரைப்படமான ’ட்ரான்ஸ்’ என்ற திரைப்படம் கேரளாவில் பம்பர் ஹிட் கொடுத்தது.
தற்போது நடிகர் பகத் பாசில் இன்றைய தினத்தில் பிறந்த நாளை கொண்டாடி வரும் சூழலில் தன்னுடைய அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.