மக்களே உஷார்!! நாளை இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசாசனது முதல் கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் பிப்.27-ல் கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாகவும், காலையில் பனிமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், நாளை தென் கடலோரப் பகுதிகள், குமரிக் கடல்பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு நாளை வரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
