வெளிநாட்டில் இருந்து ஒரு வாட்ஸ் அப் கால் வந்தால் அது வெளிநாட்டிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்து கூட வெளிநாட்டு நம்பரில் அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது மோசடி அழைப்புகள் பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது என்றும் வெளிநாட்டு நபரிடம் இருந்து அழைக்கப்படும் அழைப்புகளில் இருந்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்வதில் பலர் குறியாக இருக்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
பெரும்பாலும் வெளிநாட்டு எண்களில் இருந்து நமக்கு தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பை துண்டிக்க வேண்டும் என்று தான் அறிவுரையாக கூறப்பட்டு வருகிறது, ஏனெனில் வெளிநாட்டு எண்களில் இருந்து பெரும்பாலும் வரும் வாட்ஸப் கால்கள் மோசடி கால்களாவே உள்ளது அல்லது விளம்பர கால்களாக உள்ளது என்பதுதான் ஆய்வுகளின் அறிக்கையாக உள்ளது.
அது மட்டும் இன்றி வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் எண்கள் வெளிநாட்டில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டே வெளிநாட்டிலிருந்து கால் செய்வது போல் வாட்ஸஒப் கால் செய்யலாம் என்றும் வெளிநாட்டு எண்களை விற்பனை செய்யும் ஏஜென்சிகள் உலகம் முழுவதும் இருப்பதால் இது மிகவும் சாத்தியம் என்று கூறப்படுகிறது.
எனவே வாட்ஸ் அப் கால் மூலம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருப்பதால் தெரியாத நபர்களிடம் இருந்து குறிப்பாக வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் கால்களை தவிர்ப்பதே நல்லது என்று அறிவுரையாக கூறப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப் கால் உள்பட பல்வேறு வகைகளில் மோசடி கால்கள் அப்பாவி பொதுமக்களின் பணத்தை சுருட்டும் முயற்சிகள் ஈடுபட்டு உள்ளதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.