Connect with us

டெபாசிட் போய்விடும் ஜாக்கிரதை: அதிமுகவுக்கு எச்சரிக்கை செய்யும் தேமுதிக!

Tamil Nadu

டெபாசிட் போய்விடும் ஜாக்கிரதை: அதிமுகவுக்கு எச்சரிக்கை செய்யும் தேமுதிக!

7190b7d5bfb780577cc214610ef6c639

நாங்கள் கூட்டணியில் இல்லாவிட்டால் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என தேமுதிக நிர்வாகி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தொகுதி உடன்பாடு முடிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக தேமுதிக நிர்வாகி இளங்கோவன் என்பவர் அதிமுகவை எச்சரித்துள்ளார் 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தினால் முதல்வருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும், அது மட்டுமின்றி தமிழகத்தில் எந்த தொகுதியிலும் தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்றால் அதிமுக ஜெயிக்காது என்று எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

c3b8e1b02b87ab030c5a5a7270ed78dc

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்ட உள்ளார். இந்த கூட்டத்தில் அவர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்து தனித்து போட்டி என்ற அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தேமுதிக கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற கூட்டணியை அமைத்து அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற ரிஸ்க்கை மீண்டும் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top