இன்றைய தினம் தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஆனது அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாலமேடு, சூரியூர் வெளியிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு என்று காளையர்களும், காளைகளும் சீறிக்கொண்டு விளையாடி வருகின்றனர்.
இவ்வாறு உள்ள நிலையில் நாளைய தினம் காணும் பொங்கல் என்பதால் பல சுற்றுலா தளங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எண்ணிக்கையால் அலைமோதி காணப்படும்.
இதனை பயன்படுத்தி பலரும் லாபகரமான முறையில் முயற்சி செய்யும் நோக்கமும் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும். அதனை தவிர்க்கும் வண்ணமாக தமிழகத்தின் மிகப் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் கட்டண முறை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா தளங்களை காண ஒரே ஒரு முறை மட்டும் கட்டண முறை செலுத்துமாறு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பெரியவர்களுக்கு முப்பது ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் என்ற அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயத்துள்ளது வனத்துறை. இதனால் மோயார் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை பகுதிகளுக்கு செல்ல தனித்தனியே கட்டணம் தர தேவையில்லை என்பது தெரிகிறது.
கூட்ட நெரிச்சலில் சிக்கி தவிக்காமல் பயணிகள் சுற்றுலாத்தலங்களை பார்த்து ரசிக்கும் வகையில் வனத்துறை இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் சுற்றுலா வாசிகள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.