குழந்தை பெற்ற பெண்கள் அதிக சாப்பிட வேண்டிய மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவையல்!

பொதுவாக பிரண்டையை பல வகை உள்ளது, இந்த பிரண்டை மருத்துவ குணம் நிறைந்தது. பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்து உடலை பலப்படுத்தும். மேலும் அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாய்வு பிடிப்பு, வலி என அனைத்திற்கும் சிறந்த மருந்தாக அமையும்.மூலநோயால் கஷ்ட படுபவருக்கு இது கண்கண்ட மருந்து.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பிரண்டை உதவுகிறது.மேலும் குழந்தை பெற்ற பெண்களுக்கு வரும் பின் முதுகு வழியை சரிசெய்ய உதவுகிறது. வாரத்தில் 3 முறை சாப்பிட்டு வந்தால் முதுகு வழி இருந்த இடம் தெரியாமல் போயிடும்.

தேவையான பொருட்கள்

பிரண்டை – கால் கப்,

தேங்காய் துருவல் – அரை அப் ,

எள் – 1 தேக்கரண்டி ,

உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி ,

மிளகு – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

காய்ந்த மிளகாய் – 5,

பூண்டு – 4, 5 பல்

வெல்லம் – அரை எலுமிச்சை அளவு ,

புளி – அரை எலுமிச்சம்பழ அளவு,

எண்ணெய் – 2 தேக்கரண்டி ,

உப்பு – சுவைக்கு ஏற்ப .

செய்முறை:

முதலில் பிரண்டையை நன்கு சுத்தம் செய்து , அதின் நான்கு புறம் உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும்.

அடுத்து வெறும் கடாயில் எள்ளை வறுத்து கொள்ளவும் பின்பு அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்பு பிரண்டையை எண்ணெயில் தனியாக வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய சுரைக்காய் வைத்து புதுசா சுரைக்காய் மசாலா!

பின் வதக்கிய பிரண்டையையும், புளி , மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிரண்டை துவையல் ரெடி.

குறிப்பு

இந்த துவையலும் தேங்காய் துருவலை நன்கு வறுத்து சேர்த்து கொண்டால் பல நாட்களுக்கு கெட்டு போகாமால் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.