விருஞ்சி யோகம் மற்றும் ஸ்ரீ நாத யோக பலன்கள்…..

12ae5cf3fe89caf1710cd12a2eff377e

நாம் ஒவ்வொருவருக்கும்  ஜாதகம் ஒவ்வொரு பலன்களை கூறும். அதுபோலத் தான் நம்முடைய ஜாதகமும் ஒவ்வொரு யோகம் நிறைந்ததாக இருக்கும். தற்போது இந்த யோகங்கள் பற்றி தான் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். இன்று நாம் பார்க்க உள்ளது விருஞ்சி யோகம், ஸ்ரீநாத யோகம் போன்ற யோகங்கள் ஆகும்.

முதலில் விருஞ்சி யோகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா…. பொதுவாக இந்த யோகம் எவர் ஒருவருக்கு கிடைக்கும் என்றால் ஒருவர் ஜாதகத்தின் கேந்திரத்தில் சனி, குரு, லக்கினாதிபதி ஆகிய மூன்றும் இருந்து இந்த இடங்கள் உச்சம், நட்பு, ஆட்சி வீடுகளாக அமையப் பெற்றால்  அவருக்கு இந்த யோகம் கிட்டுகிறது. இந்த யோகம் ஒருவருக்கு இருந்தால் அவர் நீண்ட ஆயுளுடனும், வேத ஞானம் அறிந்தவராகவும் இருப்பாராம்.

அடுத்து ஸ்ரீநாத யோகம் என்ன சொல்கிறது என்றால் கேந்திர திரிகோணங்களில் புதன், சுக்கிரன் மற்றும் ஒன்பதுக்குடையவன் போன்ற இந்த மூன்று கிரகங்களும் நட்பு, உச்சம், ஆட்சி வீடுகளில் இருந்தால் இந்த யோகத்தை ஒருவர் பெறுவர்.

மேலும் இந்த யோகத்தால் ஒருவருக்கு என்ன பயன் என்றால் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் பேரன்பு கொண்டவாராய் வாழலாம் என்பது இந்த யோக பலனாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.