திணையின் நன்மைகள் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

1e62c10aa2d05cfaa1a3a5c3919b7e00

திணையில் பொதுவாக நாம் கஞ்சி, புட்டு போன்றவற்றுடன் திணை மாவினை அவித்துச் சாப்பிடவும் செய்யலாம். மலைகளில் தேனுடன் திணை மாவினையே பொதுவாக அனைவரும் வைத்துச் சாப்பிடுவர்.

திணை மாவு அதிக அளவு புரதச் சத்தினைக் கொண்டுள்ளதால் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சருமரீதியான பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.

மேலும் இதில் உள்ள அதிக அளவு கால்சியமானது எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துவதாக உள்ளது.

மேலும் உடல் பலவீனமானவர்கள், நீண்டகாலமாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் திணை கஞ்சியினைக் குடித்துவருதல் வேண்டும்.

மேலும் திணை செரிமான சக்தியினை மேம்படுத்துவதால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாம். மேலும் இது மலச்சிக்கலை சரிசெய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மேலும் திணை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கொண்டுவருவதால் சர்க்கரை நோயாளிகள் எவ்வித தயக்கமும் இலலாமல் எடுத்துக் கொள்ளலாம்.

திணையானது நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டினை சீர்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews