நுங்கின் நன்மைகள் குறித்துப் பார்ப்போம் வாங்க!!

17d65d8f6aa67a5fc298b19b9735a327

கோடை காலங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவுப் பொருள் வகைகளில் மக்கள் விரும்பிச் சாப்பிடுவது தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் மற்றும் நுங்கு ஆகும்.

இவை அனைத்தையும் பிடிக்காதவர்கள்கூட இருக்கலாம், ஆனால் நுங்கினைப் பிடிக்காதவர்கள் என்ற ஒருவரை நாம் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

நுங்கு உடல் சூட்டினைத் தணிப்பதாகவும், வயிற்று எரிச்சல் பிரச்சினைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுங்கு கொடுக்கலாம்.

மேலும் இது உடல் எடையினை வெகுவாகக் குறைக்கும் தன்மை கொண்டதால் டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவுப் பொருளாகும்.

கர்ப்ப காலங்களில் பெண்கள் எடுத்துக் கொள்ளுதல் நல்லது. இது பசியின்மை மற்றும் வாந்தி பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. செரிமானப் பிரச்சினைகள் இருப்பவர்கல் நுங்கினைச் சாப்பிட்டால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

மூல வியாதி இருப்பவர்களுக்கு மருத்துவர்களால் இளநீர் மற்றும் நுங்கு பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், மிகக் குறைவாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் நுங்கு தீர்வாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.