குதிரைவாலி அரிசியின் நன்மைகள் தெரிஞ்சா அசந்து போவீங்க!

598114156591a2e381b4e460f34512ba

நீரிழிவு நோயாளிகள் சாதாரண அரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் அதற்குப் பதிலாக குதிரைவாலி அரிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் 6 மாதங்களில் குழந்தைகளுக்கு திரவ உணவில் இருந்து திட உணவுக்கு மாறும் போது குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து கொடுத்தால் எளிதில் செரிமானமாகும்.

குதிரைவாலி கண்பார்வை சம்பந்தமான குறைபாடு இருப்பவர்கள் குதிரைவாலி அரிசியினை எடுத்துவந்தால் மிகச் சிறந்த தீர்வினை விரைவில் பெற முடியும்.

மேலும் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையினை சீராகப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.

குதிரைவாலி கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து பற்றாக்குறை இருப்பின் குதிரைவாலி கஞ்சி காய்ச்சிக் கொடுத்துவந்தால் இரும்புச் சத்தானது அதிகரிக்கும். அதேபோல் வளர் இளம் பெண்களுக்கும் குதிரைவாலியால் செய்த இனிப்பு வகைகளையோ அல்லது கஞ்சியையோ கொடுத்து வரலாம்.

மேலும் சிறுநீர்ப் போக்கு குறைந்து இருப்பவர்கள் குதிரைவாலியில் மிகவும் தண்ணீர்போல் காய்ச்சி கஞ்சி குடித்தால் சிறுநீர்ப் போக்கு அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.