மருதாணி இலையின் நன்மைகள் தெரிஞ்சா பயன்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்!

f3c96ff13a57c86cfa1cf28f2d7c0e91-1

மருதாணி இலையானது பாதத்தின் அடிப்புறத்தில் ஏற்படும் பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பினை சரி செய்கின்றது. அதாவது பாதத்திற்கு அடியில் அரைத்த மருதாணியை தடவி வந்தால் பாத எரிச்சல் ம்ற்றும் பாத வெடிப்பு சரியாகும்.

மேலும் உடல் சூடு பிரச்சினைகளைச் சரிசெய்வதில் மருதாணியின் பங்கு அதிகப்படியானதாக உள்ளது. மேலும் மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களும் தொடர்ந்து மருதாணியைப் பயன்படுத்தி வரலாம்.

மேலும் நரை முடி சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் கெமிக்கல் கலந்த செயற்கையான ஹேர் டை போன்றவற்றினைப் பயன்படுத்தி வந்தால் எதிர்காலத்தில் உடல்ரீதியான பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புண்டு.

அதனால் நாம் மருதாணி இலையில் தயாரிக்கப்பட்ட இயற்கையான ஹேர் டையினைப் பயன்படுத்தி வந்தால் உடல் நலப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

சிலர் மருதாணி குளிர்ச்சியினை ஏற்படுத்தி சளித் தொல்லை பிரச்சினைகளுக்கு ஆளாக்குவதுண்டு. இதனைத் தவிர்க்க நொச்சி இலை சேர்த்து அரைத்துப் பயன்படுத்தவும்.

மேலும் கண் எரிச்சல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சினைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக மருதாணி உள்ளது.

மேலும் மருதாணியைப் பொடித்து தண்ணீரில் கலந்து தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.