சௌ சௌவின் நன்மைகள் தெரிஞ்சா அசந்து போவீங்க!

d70cf82903ff4539594e515f206aae69-1

சௌ சௌ நீர்ச் சத்து நிறைந்த காய் என்பதால் அனைவரும் கொஞ்சமும் தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெயில் காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளில் ஒன்றாகும்.

மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் அவர்களது டயட்டில் சௌ சௌவினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதனைத் தொடர்ந்து 30 நாட்கள் எடுத்துவந்தால் உடல் எடையானது குறையும்.

மேலும் இது உடலின் நீர்ச் சத்தினை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் கரைப்பதாக உள்ளது.

மேலும் சௌ சௌ உடலில் ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளான பசியின்மை, செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தச் செய்கின்றது.

மேலும் சௌ சௌவினை குழம்பாக, பொரியலாக, கூட்டாக என எப்படிச் சாப்பிட்டாலும், ஜூஸாக சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கச் செய்கின்றது.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.