சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்வதால் உண்டாகும் பலன்

1e5dd7e5adc5befba33f2feb0d0b2595

சிவலிங்க அபிஷேக பலன்

சிவபிரானுக்கு மாதம் ஒரு நாள் வீதம் 40 ஆண்டுகள் வரை நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும்.

ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும் சிவபதத்தை யடைவர்.

கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம்.

பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும்.

தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும்.

தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும்.

கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம்.

பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை யடையலாம்.

வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை யடையலாம்.

புஷ்பத்தோடு கூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரியலோகத்தையடையலாம்.

சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும்,

இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும்,

தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.

குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும்.

பன்னீரில் நனைத்த 108 ஐந்து முக ருத்ராட்சம் களைக் கொண்டு அபிஷேகம் 108 தேய்பிறை சிவராத்திரியில் அபிஷேகம் செய்து முடித்தால் சிவ கணம் ஆகி ஈசனின் அருகில் வாழும் பாக்கியம் உண்டாகும்.

பஞ்ச கவ்யம் மற்றும் வில்வத்தில் ஊற வைத்த 108 ஐந்து முக ருதராட்சந்களால் 108 திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் குளிகை காலத்தில் அல்லது ராகு காலத்தில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து விட்டால் சிவ கடாட்சம் பெற்று மறு பிறவியில் ஆதீனத் தலைமை பொறுப்பு ஏற்பர்.அவரது ஆதீன ஆட்சி காலத்தில் சைவ சித்தாந்த பிரச்சாரம் பல லட்சம் மக்களை சென்றடையும்.

இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை யடைதல் கூடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews