நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணி

73b858d430f32e435e813b58c902d067

கோவில் உழவாரப்பணி என்பது கோவில்களின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவது ஆகும். தற்போது நிறைய கோவில்களில் உழவாரப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் ஏராளமான உழவாரத் திருப்பணி குழுக்கள் நமது தமிழ்நாட்டுக்கு  தேவைப்படுகின்றன.
ஈசனை முழுமுதற்கடவுளாக என்னும் அடியார்கள் அவரவர் வாழ்ந்து வரும் தெருவில் புதிய உழவாரத் திருப்பணி குழுக்களை உருவாக்கும் படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

உழவாரப்பணி செய்ய வேண்டிய ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. 
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 ,00,000 பழமையான சிவாலயங்கள் உள்ளன.  சுமார் 50,000 பழமையான விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. 
சுமார் 2,000 விநாயகர், முருகன், வராகி, பைரவர் மற்றும் பிற தெய்வங்களுக்குரிய ஆலயங்களும் உள்ளன. 
ஆனால் நம்முடைய மாநிலம் முழுவதும் இருக்கும் உழவாரப்பணி செய்யும் சிவனடியார்கள் குழு  சுமார் 30,000 மட்டுமே உள்ளன.
மாதம் ஒருமுறை உழவாரப் பணி செய்வதன் மூலமாக நம்முடைய ஜனன ஜாதகத்தில் உள்ள பல்வேறு கடுமையான கர்மவினைகள் படிப்படியாக அதே சமயம் வெகு சீக்கிரமாக தீர்ந்து விடுகின்றன..

புதிதாக உருவாகும் உழவாரப்பணி குழுவிற்கு தலைவராக அந்த சிவபெருமானே எண்ணி சிவத் தொண்டு புரியும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews