நெல்லை; பட்டா மாறுதல் பெற 8 ஆயிரம் லஞ்சம்.. வி.ஏ.ஓ அதிரடி கைது!!

நெல்லை மாவட்டம் பாளையம் செட்டி குளத்தில் பட்டா மாறுதல் செய்து வாங்கி தருவதாக கூறி ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாரிசு, சாதி, பாட்டா மாற்றுதல் போன்ற சான்றிதழ்களுக்கு பல்வேறு இடங்களில் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார் வந்தவண்ணமாகவே உள்ளது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் புறநகர் பகுதியாக பாளையம் செட்டி பகுதியில் தங்கபாண்டி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

ஒரு மாதம்! முக்கிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

அதே சமயம் விண்ணப்பித்தலுக்கு உண்டான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியதாக தெரிகிறது. இருப்பினும் பட்டா மாற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள 8 ஆயிரம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை அதிரடியாக கைது செய்தனர். வளர்ந்து வரும் நவீன காலக்கட்டத்திற்கு மத்தியில் அரசு அதிகாரிகளின் வேலையை சுலபமாக்க ஆன்லைன் முறையினை அரசு கொண்டுவந்தும் இது போன்ற சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.