தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!!!

நம் தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பெரும் சர்ச்சையாக காணப்பட்டது தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் தான்.  இதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி தமிழக அரசு அனுமதித்தது. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய தெரிகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் வரும் 22ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இந்த நிலையில் பட்டண பிரவேசம் நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அரசிடம் விண்ணப்பிக்க தருமபுரம் ஆதீனத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதினத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு தர மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரவேசத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ராஜா சிவப்பிரகாசம் வழக்கு தொடுத்தார். காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னையை சேர்ந்த மனுதாரரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment