தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்: எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? யாரெல்லாம் உள்ளனர்?

திட்டமிட்டபடி இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இவை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உரையாற்றினார். இந்த நிலையில் நீட் விலக்கு தொடர்பாக கூடியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பல கட்சியினர் சார்பில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துரைமுருகன் கலந்து கொண்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வபெருந்தகை பங்கேற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிந்தனைச்செல்வன் பங்கேற்றுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே மணியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சதன் திருமலைக்குமார் பங்கேற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி ராமச்சந்திரன் பங்கேற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாலி பங்கேற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்றுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன் பங்கேற்றுள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment