பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடு

நினைத்த நேரத்தில் உயிர்விடும் அரிய வரத்தினை பெற்ற பீஷ்மர், குருஷேத்திர போரில் அர்ஜூனனின் அம்புமழையில் வீழ்த்தப்பட்ட போதிலும் போரின் முடிவு காணாமல் உயிர் துறக்க மனமில்லாமல் உயிரை கையில் பிடித்தபடி அம்புப்படுக்கையில் கிடந்தார். மகாபாரதப் போரில் அர்ஜுனனால் உத்தராயணத்தில் உயிர் துறக்க நினைத்தார் பீஷ்மர். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார். ”வியாசா! நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?” என்று பீஷ்மர் கேட்டார்.

பீஷ்மா!, நீ உன் மனசறிந்து யாருக்கும் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.” என்றார் வியாசர். புரியாமல் விழித்த பீஷ்மரிடம், சபை நடுவே பாஞ்சலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்ததுதான் நீ செய்த மிகப்பெரிய தவறு என பீஷ்மருக்கு உணர்த்தினார்.

”வியாசா! இதற்கு விமோசனம் எது ?என பீஷ்மர் கேட்க, ‘பீஷ்மா !எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது உன் தவறு மன்னிக்கப்பட்டது. ஆனாலும், கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டினார் பீஷ்மர். ”எருக்க இலையை காட்டிய வியாசர், ”அர்க்கம்” என்றால் சூரியன். இதை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்”.

நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையை, ரத சப்தமி நாளில் தலையில் வைத்து ஸ்நானம் செய்வது நம் பாவம் போக்கத்தான்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment