சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கனமழை பெய்து வருவதால் காரணமாக பலர் சென்னைக்கு திரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது
மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னைக்கு உடனடியாக திரும்ப வேண்டாம் என்று வெளியூர் சென்ற பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 400 பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குறைவாக இயக்கப்படும் பேருந்துகளிலும் பெரும்பாலும் பயணிகள் இல்லாமல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது