பீஸ்ட் பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகுமா? நாளைய தினத்திற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவில் தளபதி என்ற பெயரை தக்க வைத்து உள்ளார் நடிகர் விஜய். அண்மைக் காலமாக நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் வசூல் சாதனை புரிகின்றன.

இதனால் நாளுக்கு நாள் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் அவரின் நடிப்பில் உருவாகிக் கொண்டுள்ளது திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேஜ் நடித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் துப்பாக்கி வைத்திருக்கும் பீஸ்ட் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவியது.

நாளைய தினமும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து அமைய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை பீஸ்ட் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சன் பிக்சர்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பீஸ்ட் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலுடன் கூடிய ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் நாளை ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment