Connect with us

தியேட்டர் எங்கும் ஒரே அரபி குத்துதான்…! கோலாகலமாக வெளியானது பீஸ்ட்!!

பீஸ்ட்

Entertainment

தியேட்டர் எங்கும் ஒரே அரபி குத்துதான்…! கோலாகலமாக வெளியானது பீஸ்ட்!!

தியேட்டர் எங்கும் ஒரே அரபி குத்துதான்…! கோலாகலமாக வெளியானது பீஸ்ட்!!

தனது நடிப்பாலும் திறமையாலும் இன்று ரசிகர்களிடையே தளபதி என்ற பெயரை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் இவருக்கு 65ஆவது திரைப்படமாக காணப்படுகிறது.

அந்தப்படி இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதில் நடிகர் யோகிபாபு, நடிகர் செல்வராகவன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இன்று தமிழகமெங்கும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வெளியானது. அதிலும் ரசிகர்கள் வெளியிடுவதற்கு முன்னதாகவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பல்வேறு விதமான செயல்களில் தங்களது இன்பத்தை வெளிப்படுத்தினர்.

பல இடங்களில் கொட்டும் மழையிலும் கூட டிஜே வைத்து ரசிகர்கள் படத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் இந்தத் திரைப்படம் முதல் காட்சியாக 4 மணிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top