தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே
அதன்படி சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் ‘பீஸ்ட்’ என்று அறிவித்துள்ளது. இந்த டைட்டிலை விஜய் ரசிகர்கள் தற்போது டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தளபதி 65 படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் மேலும் இந்த திரைப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ் விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#Thalapathy65 is #BEAST@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja#BEASTFirstLook #Thalapathy65FirstLook pic.twitter.com/Wv7wDq06rh
— Sun Pictures (@sunpictures) June 21, 2021