அப்பாடா; ஒரு வழியா சம்மதம் தெரிவித்த ஆளுநர்! ‘நீட் விலக்கு மசோதா’வை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக உறுதி…!!
நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக 2022ஆம் ஆண்டு தொடங்கியது முதல் அடுத்தடுத்து நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். மேலும் தமிழக அரசால் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா ரத்து செய்யப்பட்டு மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியானது. இந்த நிலையில் நீட் விலக்கு பற்றிய நல்லதொரு செய்தி கிடைத்துள்ளதாக தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன்படி நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் உணவுக்கு எதிரான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விரைவில் விலக்கு கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமைச்சர் கே.என்.நேருவின் குடும்ப இல்ல மணவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
