நாளை, நாளை மறுநாள் கொஞ்சம் ஜாக்கிரதை!! 9 மாவட்டங்களில் கனமழை..!!

நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் குறிப்பிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தலைநகர் சென்னையில் லேசான மழை வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment