பி.இ, பி.டெக். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

23b719c22da55dd89a131e6b83e42ada

பி.இ, பி.டெக். படிப்பதற்காக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி வரை இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்குனரம் அறிவித்துள்ளது

பொறியியல் கல்லூரிகளில் உள்ள பிஇ, பிடெக் மற்றும் படிப்புகளுக்கு தற்போது விறுவிறுப்பாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வரும் நிலையில் இந்த விண்ணப்பங்களை செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 94869 77757, 0422-2574071, 2574072 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

இண்டர்நெட் வசதியில்லாதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment