வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?

கடந்த 15 ஆண்டுகளாக ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன என்பதும் இதன் மூலம் கோடி கணக்கான பணம் வருமானமாக வந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

தற்போது ஆண்கள் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் அடுத்த சீசன் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் தொடங்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில் வரும் புதன் கிழமை 5 அணிகள் ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆணியும் சுமார் 500 முதல் 600 கோடி வரை விற்பனை ஆகும் என்றும் குறைந்தபட்சம் 4000 கோடி பிசிசிஐக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 500 கோடி ஆரம்ப தொகையாக இருந்தாலும் 800 கோடி வரை ஒரு அணியை ஏலம் எடுக்க நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் இதனால் 4000 கோடி என்பது மிக எளிதில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ipl womenஇந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் பெண்கள் ஐபிஎல் அணியை ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐந்தாண்டு காலத்துக்கு ஏலம் எடுக்க 500 கோடி செலவு செய்ய நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் ஆண்டுக்கு 100 கோடி என்ற கணக்கில் இந்த பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு என கோடிக்கணக்கான ரசிகர் இருக்கின்றனர் என்பதும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மட்டும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி வருவதாகவும் இதன் மூலம் செல்வம் கொழிக்கும் விளையாட்டாக ஐபிஎல் மாறி உள்ளதால் ஐபிஎல் அணிய ஏலம் எடுக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிகிறது.

5 அணிகளை ஏலம் எடுக்க கிட்டத்தட்ட 15 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் இவற்றில் எந்த நிறுவனங்கள் எந்தெந்த அணிகளை கைப்பற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆண்கள் அணிக்கு நிகராக பெண்கள் அணியில் வருமானம் இருக்காது என்றாலும் மிகப்பெரிய தொகை வருமானம் வரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐபிஎல் போட்டிகளின் மூலம் மிகச் சிறந்த வீராங்கனைகள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்றும் அவர்கள் இந்திய அணிகளில் இடம்பெறிய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது. ஆண்கள் அணியில் ஐபிஎல் போட்டி மூலம் தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் தற்போது இந்திய அணியில் இருப்பது போல் வீராங்கனைகளுக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பெண்கள் ஐபிஎல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.