Connect with us

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு: பிசிசிஐ அறிவிப்பு

Sports

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு: பிசிசிஐ அறிவிப்பு

a3273a62451d350ebf7b95406cbb9c67

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது 

ஜப்பானில் நேற்றுடன் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன என்பது தெரிந்ததே. ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என ஏழு பதக்கங்கள் கிடைத்த நிலையில் பதக்கம் வென்ற அனைவருக்கும் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரப் சோப்ராவுக்கு ரூ.1 கோடியும், வெள்ளி வென்ற மீராபாய் சானு மற்றும் ரவிக்குமார் தாஹியா ஆகிய இருவருக்கும் ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற பிவி சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியாவு ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் மேலும் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.25 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 

மேலும் ஏற்கனவே தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடி பரிசு தருவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top