கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென்று தீப்பிடித்து எரிகின்றன. இதனால் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து உள்ளது.
இந்த நிலையில் மின் வாகன தீ விபத்தை தவிப்பது எப்படி பற்றிய சில குறுந்தகவல்கள் கிடைத்துள்ளது. பொதுவாக மின் வாகனங்களில் ஆற்றலை சேமிக்கும் பேட்டரியில் ஏங்குகின்றன. லித்தியம் அயன் பேட்டரி தற்போது அதிகளவில் மின் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தை சரியாகவும் கவனமாகவும் கையாள்வதன் மூலமாக தீ விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ஐஐடி மாணவர் அருண் கூறியுள்ளார் .தரமான பேட்டரி வாகனங்களை வாங்குவது மற்றும் அதனை கவனமாக பராமரிப்பது மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மைய சான்றிதழை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பேட்டரிகள் U.N. 38.3 என்ற தர சான்றிதழை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் வாகனம் வாங்கும்போது பேட்டரி கண்காணிப்பு அமைப்பு உள்ள பேட்டரியா என்பதனை உறுதி செய்ய வேண்டும். பேட்டரியின் செயல் திறன், ஆற்றல் சேமிக்கும் திறன் ஆகியவற்றை BMS அமைப்பு கண்காணிக்கும் என்றும் தெரிகிறது,
மின்னழுத்தம், ஷார்ட் சர்க்யூட், அதிக வெப்ப நிலை ஏற்படாமல் BMS அமைப்பு பார்த்துக் கொள்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே பேட்டரிகளை பழுது பார்த்து சரிபார்க்க வேண்டும்.
வாகனத்தின் சார்ஜ் 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை இருக்கும் வகையில் வாகனத்தில் இயக்கவேண்டும். 90 சதவீதத்திற்கு மேல் அதிக சார்ஜ் செய்வது அல்லது 15 சதவீதத்துக்கு கீழே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வாகனத்தில் சார்ஜ் செய்ய பயன்படும் சார்ஜிங் அவுட்லெட் பகுதி பழுதடையாமல் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நீண்ட காலமாக வாகனத்தை பயன்படுத்த சூழல் வரும்போது பேட்டரி 30 சதவீதம் என்ற அளவில் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வாகனத்தை சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்காமல் நிலையில் நிறுத்த வேண்டும்.