அடேய் உங்களால வெள்ளத்துக்கு உண்டான மரியாதையே போச்சுடா..!

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக மழை பதிவாகியுள்ளதாம். அதுமட்டும் அல்ல கடந்த 2 நூற்றாண்டுகளில் மூன்றாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் மட்டும் 1,000 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பொழிந்துள்ளது.

இந்தாண்டு சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மழை மற்றும் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. அதிலும் பெரும்பாலான கிராமங்கள் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவர்களின் வீட்டை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழை வெள்ளம் சிலருக்கு மட்டும் தான் மோசமான அனுபவமாக உள்ளது. ஆனால் பலர் இந்த மழை வெள்ளத்தை மகிழ்ச்சியாக என்ஜாய் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கன்னியாகுமரி மக்கள் மழை வெள்ளத்தில் ஜாலியாக விளையாடியும், டைவ் அடித்து நீச்சல் அடித்தும் கும்மாளம் போட்ட வீடியோ இணையத்தில் வைரவானது.

காவல்துறை மட்டுமல்ல கலெக்டரும் உங்கள் நண்பன் தான்! கெத்து காட்டும் விருதுநகர் கலெக்டர்!!

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் உற்சாகமாக டிவி பார்த்தபடியே வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரில் ஆனந்த குளியல் போட்டு கொண்டிருக்கிறார். இந்த வீடியோ எதார்த்தமாக எடுக்கப்படதா அல்லது திட்டமிட்டு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நாங்கலாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க போடுவோம்னு சொல்லுவாரு. அந்த டயலாக் இந்த மக்களுக்குதான் பொருந்தும் போல. அவன் அவன் ஆத்துல வெள்ளம் வந்து செத்துக்கிட்டு இருக்கான் இவனுங்க என்னடானா ஆனந்த குளியல் போட்டுக்கிட்டு இருக்கானுங்கனு சோசியல் மீடியாவில் மீம்களும் வர தொடங்கி விட்டது.

வீடியோ காண: https://www.instagram.com/p/CW5pQu8lxyj/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment