தென்காசியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் தண்ணீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தென்காசி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்ததால் தெரிகிறது.
இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தண்ணீரின் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.