Connect with us

சீசன் ஆரம்பிச்ச நேரத்தில் இப்படியா!! சுருளி அருவியில் மீண்டும் குளிக்க தடை!!

suruli

தமிழகம்

சீசன் ஆரம்பிச்ச நேரத்தில் இப்படியா!! சுருளி அருவியில் மீண்டும் குளிக்க தடை!!

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெரும்பாலும் குளிர்ச்சியான வானிலை நிலவும். அந்த மேற்கு தொடர்ச்சி மலையோரம் மாவட்டங்களில் பிரதான ஒன்றாக காணப்படுவது தேனி மாவட்டம் தான்.

ஏனென்றால் அங்கு மேகமலை, சுருளி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அங்கு எப்பொழுதும் வானிலை ஆனது மிகவும் கூலிங்கான நிலைமையிலே காணப்படும்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் மே மாதம் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வந்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியிலும் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் கன மழை பெய்தது.

இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top