கனமழை! குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை..!!!

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 2-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசியில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய குற்றாலம் அருவி, மெயின் அருவி போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஒரே மணமேடை!! இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்!!

இந்நிலையில் நேற்று மாலை முதலில் இருந்தே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் வெள்ளப்பெருக்கானது தொடர்ந்து அதிகரித்துள்ளால் குற்றாலம் அருவி, மெயின் அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தருவியில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி பள்ளி மீண்டும் திறப்பு: ஆர்வத்துடன் வகுப்பறைக்குள் சென்ற மாணவர்கள்!!

மேலும், விடுமுறை தினம் மற்றும் ஐய்யப்பன் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் மற்ற அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.