கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!!

தென்காசி மலைப்பகுதிகளில் பெய்த திடீர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்காசியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் இன்று காலை முதலில் இருந்தே நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின்களின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய குற்றால அருவி மற்றும் மெயின் அருவில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற அருவிகளில் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே நாளை சபரி மலையில் மண்டல பூஜை நடப்பதால் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.