கனமழை எதிரொலி: குற்றால அருவியில் குளிக்க தடை!!

தென்காசியில் இருக்கும் குற்றாலத்திற்கு கர்நாடக, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளதால் தற்போது குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்றைய தினத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது. அதில் தென்காசியும் என வானிலை மையம் கணித்திருந்தது.

இதனிடையே குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முற்றிலும் தடை விதிக்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment