குற்றால பிரதான அருவியில் குளிக்க தடை!! இதர அருவிகளில் அனுமதியா?

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பெரும் சோகத்தை சந்திக்கின்றனர்.

ஏனென்றால் தமிழகத்திலேயே அதிக அருவிகளை கொண்ட மாவட்டமாக தென்காசி மாவட்டம் திகழ்கிறது. தென்காசியில் குற்றாலம், பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி என ஏராளமான அருவிகள் காணப்படுகின்றன.

இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இது வருத்தத்ததை அளித்தாலும் இன்றைய தினம் குற்றால பிரதான அருவியில் மட்டுமே குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தென்காசி குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட இதர அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிக அளவில் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment