Connect with us

சுற்றுலா பயணிகள் சோகம்; குற்றால அருவிகளில் குளிக்க நாலாவது நாளாக தடை!!

cuttralam

தமிழகம்

சுற்றுலா பயணிகள் சோகம்; குற்றால அருவிகளில் குளிக்க நாலாவது நாளாக தடை!!

தமிழகத்திலேயே அதிக அருவிகளைக் கொண்ட மாவட்டமாக அமைந்துள்ளது தென்காசி மாவட்டம், முன் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் தென்காசி மாவட்டத்தில் பிரதான அருவியாக காணப்படுவது குற்றால அருவிகள் தான்.

இந்த குற்றால அருவிகள் தென் தமிழகம் மக்களின் சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. அதன்படி அங்கு ஐந்தறிவு, பிரதான அருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி என ஏராளமான அருவிகளின் எண்ணிக்கை காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நாலாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top